--- --:--:-- --

சிறுவர்களுக்கு சிட்டிங்க் சேர் தண்டனை! சர்ச்சையில் சிக்கிய போலீஸ்!

5

சென்னை முழுவதும் கொரொனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் ஆள் நடமாட்டம் குறைந்த சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் 3 சிறுவர்களை பிடித்து தண்டனை கொடுத்த போலீஸ்காரர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

சென்னையில் கொரொனா பீதியில் சிறுவர்கள் வீட்டிற்குள் இருக்க பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறியும், இறங்கியும் ஆபத்தான சாகசத்தை செய்த சிறுவர்கள் மூன்று பேரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஒருவர் மடக்கிப் பிடித்தார்.

 

அவர் சிறுவர்களை கையை தூக்கி கொண்டே தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை அளித்தார். பொதுவெளியில் சிறுவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon