மனநலம் பாதித்த பெண்ணை லத்தியால் தாக்கிய ஆயுதப்படை காவலர்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார்.

 

அவரை ஆயுதப்படை காவலர்கள் அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தும் அப்பெண் மீண்டும் மீண்டும் ரயில்வே நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆயுதப்படை காவலர் கிருஷ்ணமூர்த்தி அப்பெண்ணை லத்தியால் கடுமையாக தாக்கினார்.

 

இதில் அந்தப் பெண்ணின் தலையில் இருந்து ரத்தம் கொட்டியதை அடுத்து ரயில் நிலையத்தில் இருந்த சிலர் காவலரை தடுத்து அப்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதனையடுத்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உத்தரவின்பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய ஆயுதப்படை காவலர் கிருஷ்ணமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


Leave a Reply