--- --:--:-- --

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை நிறுத்திவைப்பு

2

கொரானா வைரஸ் தாக்கத்தால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை குறித்த தகவலை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

 

ஆனால் பல தனியார் பள்ளிகள் பெற்றோர்களுக்கு விடுமுறை குறித்த தகவலை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி விட்டனர். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வி ஆணைகளை தொடர்புகொண்டபோது திங்கள்கிழமை ஒரு புதிய அறிவிப்பு வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

 

கொரொனா தாக்கத்தால் அனைத்து மாவட்ட பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கும், கேரளாவை ஒட்டியுள்ள தேனி, நெல்லை, தென்காசி, நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon