திடமாக இருந்து கொரோனாவை எதிர்ப்போம்

திடமாக இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கொரொனா வைரசை எதிர்ப்போம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் பாதுகாப்புடனும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

வருமுன் காப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ள விராட் கோலி கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தயவு செய்து அனைவரும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என விராட்கோலி அறிவுறுத்தியுள்ளார்.

 

கொரொனா காரணமாக கர்நாடகாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளில் மதிய உணவை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும் பெங்களூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்த நடைமுறை கேரளாவில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply