--- --:--:-- --

என்பிஆர் கணக்கெடுப்பு பணி நிறுத்திவைப்பு..! அமைச்சர் உதயகுமார் திடீர் அறிவிப்பு!!

12

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி (என்பிஆர்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் திடீரென அறிவித்துள்ளார்.

 

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), குடிமக்கள் பதிவேடு (என்சிஆர்), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ( என்பிஆர்) ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் இவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 

இதில் என்பிஆர் எனப்பதும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த என்பிஆருக்கு பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்படும் கேள்விகளை விட கூடுதலாக 3 கேள்விகள் இடம் பெற்றுள்ளது.இதனால் பீகார், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களும் என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளன.

 

இதே போல் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று வலியுறுத்தின. ஆனால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை. இதனால் இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்து மக்களை ஏமாற்றப் போவதில்லை என அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்திருந்தார். மேலும், என்பிஆர் குறித்து தவறான தகவல்களை கூறி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த என்பிஆர் கணக்கெடுப்பால் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அமைச்சர் உதயக்குமார் இன்று மாலை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை திடீரென சந்தித்து என்பிஆர் குறித்து சில விளக்கங்களை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள என்பிஆரில் கூடுதலாக கூடுதலாக 3 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இந்த புதிய கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.தமிழக அரசின் கடிதத்திற்கு மத்திய அரசின் பதில் இன்னும் கிடைக்காததால் என்பி ஆர் கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon