“நாங்களும் 10 வருஷமா இதுக்குத் தான் போராடுறோம்”!! நடிகர் ரஜினியின் முடிவுக்கு சீமான் வரவேற்பு!!
நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் தமது திட்டம், கொள்கை என்பது குறித்து கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி சீமான், வரவேற்கிறோம்… வாழ்த்துகிறோம் என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தவர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளணும் என ரஜினிக்கு எதிராக மேடைக்கு மேடை முழங்கி எதிர்ப்பு காட்டி வந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தாம் முதல்வராகப் போவதில்லை; முதல்வர் பதவி மீதும் ஆசையில்லை. கட்சிக்கு தலைமை வகிப்பேன்; ஆட்சியில் திறமைசாலிகளை அமர வைத்து வழி நடத்துவேன். இளைஞர்களுக்கும், அறிவாளிகள், திறமைசாலிகளுக்கும் வாய்ப்பளிப்பேன், ஊழல்வாதிகளுக்கு இடமில்லை; கட்சிப் பதவிகளும் ரொம்ப பேருக்கு கிடையாது என்ற ரீதியில் தமது கொள்கை, திட்டங்களை பட்டியலிட்டிருந்தார்.

ரஜினியின் இந்த திடீர் முடிவை, இப்போது நாம் தமிழர் கட்சியின் சீமான் அமோகமாக வரவேற்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்! என சீமான் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




