சாமிக்கு பட்டு சார்த்தி இஸ்லாமியர்கள் வழிபாடு
கடலூர் மாவட்டம் கிள்ளை தைக்கால் கிராமத்தில் தீர்த்த வாதிக்கு சென்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு இஸ்லாமியர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தர்கா சார்பில் பூவராக சுவாமிக்கு பட்டாடை, அரிசி, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தினர்.
இதேபோல் கோவில் சார்பில் தர்கா அருகில் உள்ள ரகமத்துல்லா என்பவரின் சமாதியில் பத்தி பொருத்தி நாட்டுசர்க்கரை வைத்து மரியாதை செய்யப்பட்டது. எல்லோரும் எல்லாமும் பெற்று வளமாக வாழ வேண்டும் எனும் நோக்கில் இந்த பிரார்த்தனை நடத்தப்பட்டதாக தர்ஹா டிரஸ்டி சையத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




