--- --:--:-- --

ஈரான் சுப்ரீம் லீடரின் ஆலோசகரை “கொன்ற கொரானா”

8

ஈரான் நாட்டின் உயர் தலைவராக பதவி வகிக்கும் அயத்துல்லா அலிகானியின் ஆலோசகர் கொரானா பாதிப்பால் உயிரிழந்தார் . இதன்மூலம் ஈரானில் கொரானாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.

 

ஈரானில் குறித்த 908 பேரில் 385 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரானின் சுப்ரீம் லீடரும், முன்னாள் அதிபருமான அலிகானின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்த 71 வயதான முகமது அண்மையில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

 

வடக்கு டெக்ரானில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரை தவிர ஈரானின் பெண் துணை அதிபர் உட்பட அரசின் உயர் பதவிகளை அலங்கரிக்கும் பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon