--- --:--:-- --

அனுமதி பெறாத 70 குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைப்பு!

12

நிலத்தடி நீரை பயன்படுத்த தடையில்லா சான்று பெறாத மற்றும் அனுமதி பெறாது இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை கண்காணிக்க உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 சட்ட விரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்றும், இன்றும் 57 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாத மொத்தம் 70 குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 125 குடிநீர் ஆலைகள் இயங்கி வந்த நிலையில், 55 நிறுவனங்கள் மட்டுமே உரிமம் பெற்று அவற்றை முறையாக புதுப்பித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக நீடிப்பதால் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு கேன் விலை 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

 

தமிழகம் முழுவதும் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி வரும் நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இதனால் உற்பத்தி முடங்கி கேன் குடிநீர் வினியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளியமுறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon