பொதுத்தேர்வில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின்போது ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது என தேர்வுத்துறை நினைவூட்டி உள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தேர்வுத்துறை சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதை செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு நடைபெறும் வளாகம் அல்லது தேர்வறையில் எடுத்துச் செல்லக் கூடாது எனவும் விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் விதமாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






