கட்டுமான நிறுவனத்திற்குள் புகுந்து தகராறு
சென்னை போரூர் அடுத்த காட்டுப்பாக்கத்தில் பெரிய கட்டுமான நிறுவனத்திற்கு சிலர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாடபாக்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் காட்டுப்பாக்கத்தில் உள்ள கே எம் கே கான்டெக்ட் இன்ஜினியரிங் என்ற கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிறுவனம் தனக்கு மூன்று கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்க வேண்டும் எனக் கூறி தனது ஆதரவாளர்களுடன் சென்று பாலசுப்ரமணியன் கட்டுமான நிறுவனத்தில் ரகளை செய்துள்ளார்.
அதற்கு மறுத்துள்ள கே எம் கே கட்டுமான நிறுவனத்தினர் இதுதொடர்பான வழக்கை சமரச தீர்வு மையம் தள்ளுபடி செய்து விட்ட நிலையில் பாலசுப்பிரமணியம் பணம் கேட்டு மிரட்டுவதாக சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.





