--- --:--:-- --

முகமூடிக் கொள்ளையனை துடைப்பத்தால் அடித்து விரட்டிய மூதாட்டி

17

போலந்து நாட்டில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை மூதாட்டி ஒருவர் துடைப்பத்தால் அடித்து விரட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பிங்க்சின் என்ற இடத்தில் மூதாட்டி ஒருவர் பல்பொருள் அங்காடி வைத்துள்ளார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அங்கு கை துப்பாக்கிகளுடன் வந்த கொள்ளையன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றான். இதனைக் கண்ட அந்த மூதாட்டியை தரையை சுத்தம் செய்யும் துடைப்பத்தால் அந்த கொள்ளையனை தாக்கினார். ஆனாலும் கொள்ளையன் பணத்தை எடுப்பதில் குறியாக இருந்தான்.

 

விடாக்கண்ணனான கொள்ளையனை கொடாகண்ணனான மூதாட்டி சரமாரியாக தாக்கவே ஒருகட்டத்தில் நிலைகுலைந்து அந்த கொள்ளையன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். இந்த வீடியோ வெளியானதில் இருந்து அந்த மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon