ஹஜ் பயணிகளுக்காக சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம்
ஹஜ் பயணிகள் வசதிக்காக சென்னையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் தங்கும் இல்லம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் பயணத்திற்காக சென்னை வரும் இஸ்லாமியர்கள் தங்கும் இல்லம் அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் உலமாக்களுக்கு ஓய்வூதியம் 1,500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பபூன் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகையை மானியமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.





