வங்கிக்கு வரும் பெண்களுடன் உடலுறவு, ஆபாச உரையாடல்! புகாரளித்த மனைவி!
புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்து வந்த காசாளரின் செயல்கள் அவரது மனைவியின் மூலம் வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது. விராலிமலை இந்தியன் வங்கியில் காசாளராக எட்வின் ஜெயக்குமாருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.
ஆனால் அவர் இல்வாழ்க்கையில் நாட்டமின்றி ஒதுங்கி சென்றதோடு தனியறையில் பதினைந்து செல்போன்களை வைத்துக்கொண்டு வாட்ஸப்பில் மூழ்கியிருந்தார். செல்போனில் யாரிடமோ ஆபாசமாக உரையாடி வந்துள்ளார். இவற்றையெல்லாம் பார்த்த அதிர்ச்சியில் எட்வின் ஜெயக்குமாரின் செல்போன்களை ஆராய்ந்துள்ளார் அவரது மனைவி.

அதில் தனது கணவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள், உரையாடல்கள், புகைப்படங்கள், பெண்களின் வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்டவை இருந்துள்ளன. பல பெண்களை வற்புறுத்திய வாட்ஸ்அப் உரையாடல், குறுஞ்செய்திகள், குரல் பதிவுகளும் செல்போன்களில் இருந்துள்ளன. இதுகுறித்து கேட்டபோது கணவர் ஜெயக்குமாரும், மாமியாரும் மிரட்டியுள்ளனர். பின்னர் எட்வின் ஜெயக்குமாரின் மனைவி தமது தந்தை மற்றும் சகோதரர் மூலம் தஞ்சை சரக டிஐஜி லோகநாதனிடம் புகார் அளித்தார்.
இதன் பேரில் எட்வின் சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது சாதாரண வழக்கை பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த எட்வின் ஜெயக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் பெற்று தலைமறைவானார். எனினும் அவரது ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் எட்வின் ஜெயக்குமார் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்து கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் எட்வின் ஜெயக்குமார், அவரது தாய், சக ஊழியர் பிலோமினா உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.





