--- --:--:-- --

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே 30 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி..! முதல் பரிசை தட்டிச் சென்ற உறை கிணறு அணி!!

8ec548ed-dd5c-4c6b-945c-84bee4a648db

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உறைகிணறு கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றது. சாயல்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் முகமது ஜின்னா துவக்கி வைத்தார். உறவை நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

இராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. நள்ளிரவு துவங்கிய ஆட்டம் மறுநாள் வரை நீடித்தது.இறுதி ஆட்டத்தை நரிப்பையூர் ஊராட்சி தலைவர் வெட்டுக்காடு நாராயணன் துவக்கி வைத்தார்.

 

முதல் பரிசை குரு நாடார் ரியல் எஸ்டேட் உறை கிணறு, இரண்டாவது பரிசை கரிசல்குளம் , மூன்றாவது பரிசை சேசுராஜா நண்பர்கள் அணி வென்றன.வெற்றி பெற்ற அணியினருக்கு கேடயம்,ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை உறைகிணறு நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon