--- --:--:-- --

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை- ஆந்திர அரசு

7

ஆந்திர மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாளை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் உள்ளிட்டவற்றை வழங்கும் வேட்பாளர்கள் கையும் களவுமாக பிடிபட்டால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.

 

தேர்தல் வெற்றிக்குப் பிறகு முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி பறிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த குற்றங்களுக்கான சிறை தண்டனை தற்போது மூன்று முதல் ஆறு மாதங்களாக உள்ள நிலையில் இனி மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon