மதுவுக்காக தாய்-தந்தையை கொன்ற மகன்
கோவை அருகே மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன் தனது பெற்றோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த வெள்ளிமலை பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. மதுபோதைக்கு அடிமையான கார்த்தி மது வாங்குவதற்காக தனது தந்தை சுந்தரம் மற்றும் தாயிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்துள்ளனர். இதையடுத்து கடன் வாங்கி மது குடித்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பிய கார்த்தி அங்கே தூங்கிக்கொண்டிருந்த சுந்தரம் மற்றும் துளசியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவாக உள்ள கார்த்தியை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




