--- --:--:-- --

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் இந்திய மருத்துவர்

2.1

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்த ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவர்கள் ஓய்வின்றி சிகிச்சை அளித்து வரும் நிலையில், இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் குழுவை இந்திய மருத்துவர் ஒருவர் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இவர்கள்தான் உண்மையான தேவதைகள் என கொண்டாடுகின்றனர் சீன மக்கள்.

 

தூங்க கூட நேரமில்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் புகைப்படம்தான் வெளியாகி வருகிறது. வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் பல்வேறு கவச உடைகளுடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடியே பணியாற்றி வருகின்றனர்.

 

பல மணி நேரமாக மாஸ்க் இருப்பதால் காயங்களும், வடுக்களும் ஏற்படுகின்றன. ஆனால் இதையெல்லாம் துச்சமாக எண்ணி அர்ப்பணிப்புடன் கூடிய இவர்களது சேவை தொடர்ந்தாலும் மறுபக்கம் கொரோனா வைரஸின் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இப்படி ஒரு வைரஸ் பரவி வருகிறது என முதலில் கண்டறிந்து கூறியவர் லீவ் பென்லியாங்க். ஆனால் அவரையும் கொரோனா பழி வாங்கியுள்ளதால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் சீனர்கள்.

கண் மருத்துவரான லீவ் சாஸ் போன்ற மோசமான வைரஸ் உகானில் பரவி வருவதாக ஜனவரி மாத தொடக்கத்தில் தெரிவித்தார். அதுபோல உகானில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நோயாளிகளையும் இவர்தான் முதலில் அடையாளம் கண்டார். தனது நண்பர்களிடம் அவர் கூறிய இந்த தகவல் சில நாட்களில் காட்டு தீ போல சீனா முழுவதும் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதனால்தான் தண்டிக்கப்படலாம் என அஞ்சினார் லீவ். அவர் நினைத்தது போலவே தேவையற்ற வதந்திகள் பரப்பியதாக லீயை குற்றம்சாட்டினார் காவல்துறையினர்.

 

இனிமேல் இந்த வைரஸை பற்றி பேசக்கூடாது என்றும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்குப் பிறகு ஜனவரி மாதத்தின் பாதியில்தான் அந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து அது கொரோனா வைரஸ் என்று சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆட்கொல்லி வைரஸ் முதலில் கண்டறிந்து கூறியதால் சீன மக்கள் லீயை ஹீரோவாக கொண்டாடினர்.

 

தங்கள் தவறை உணர்ந்து காவல்துறையும் அவரிடம் மன்னிப்புக் கோரியது. இதன் பின்பு களத்தில் இறங்கி வைரசால் பாதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். ஆனால் நாளடைவில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் இந்திய மருத்துவர் தலைமையிலான குழுவும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் நிலையை நெருங்கியுள்ளது.

 

ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய வைரசை தனியே பிரித்து எடுப்பதில் ஆஸ்திரேலியாவின் இன்ஸ்டிடியூட் கடந்தவாரம் வெற்றி பெற்றது. இதற்காக ஆஸ்திரேலியாவில் உயர்பாதுகாப்பு வலையத்திலுள்ள ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர் புதிய வைரசை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கொண்டுள்ளது.

 

வைரஸ்க்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டுமானால் அதனை ரத்தத்திலிருந்து பிரித்து எடுப்பது, பின்னர் தனியே வளர்த்தெடுப்பது ஆகிய இரண்டு முக்கியமான பணிகள் ஆகும். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் வாசன் தலைமையிலான ஆய்வுக் குழு இதனை வெற்றிகரமாக சாதித்து உள்ளதால் கூடிய விரைவில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon