திருப்பூர், சேவூர், அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் 6 கால பூஜையுடன் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் !
திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார் கோவில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடந்தது. தற்போது இக்கோவில் கோபுரங்கள் செப்பனிடப்பட்டு, சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் மற்றும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அ.குரும்பபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார் கோவில் சுவாமிகளுக்கு மஹா கும்பபிஷேக விழா கடந்த 3 ந் தேதி காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து வெள்ளைக்குதிரைகள் நடனமாட பெண்பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து அவிநாசி சேவூர் சாலை வழியாக கோயிலை வந்தடைந்தனர். இதையடுத்து மாலை 4.00 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.

இதைத்தொடர்ந்து 4 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு விநாயகர் பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசமும், மாலை 6.00 மணிக்கு முதல் கால யாக வேள்வியும், 5 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு விநாயகர் பூஜை, கோ பூஜையும், காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வியும், காலை 10 மணிக்கு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில் ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார் சுவாமிகள் பிரதிஷ்டையும், மாலை 6.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், 6 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வியும், மாலை 6.00 மணிக்கு ஐந்தாம் கால யாக வேள்வியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியாக 6 ம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. நேற்று (7ஆம் தேதி ) காலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டத்தரசியம்மன். ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோயில் விமான கலசங்களுக்கு வரன்பாளையம் திருநாவுக்கரசர் திருமடம் தவத்திரு மெளன சிவாச்சல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அவிநாசி, திருப்பூர், சேவூர் மற்றும் சுற்று பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து காலை 9.00 மணி மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, தசதானம், தச தரிசனம் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டி மற்றும் அ.குரும்பபாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 18ஆம் தேதி வரை தினசரி மாலை 6 மணிக்கு மண்டல பூஜை நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு சேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






