வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார் 700 கிலோ ஹெராயின் கேபின் போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் இருநூறு கோடி ஆகும்.
இந்த கடத்தல் தொடர்பாக ஆப்கான் நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கான் நாட்டை சேர்ந்தவர் ஒருவாரம் முன்பு இந்தியா வந்துள்ளார். மிகப்பெரிய போதை பொருட்கள் கடத்தல் தடுத்து நிறுத்த பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பெருமளவில் போதைப்பொருட்கள் சிக்கியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்திரன் குற்றவாளிகள் தப்பி விட முடியாது என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




