இசையமைப்பாளரும் நடிகருமான டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்
இசையமைப்பாளரும், நடிகருமான டி எஸ் ராகவேந்திரா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 75 வயதான அவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.
சிந்துபைரவி, சின்னதம்பி பெரியதம்பி, அண்ணா நகர் முதல் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். உயிர், படிக்காத பாடம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னணி பாடகி சுலோச்சனாவை திருமணம் செய்துகொண்ட டி எஸ் ராகவேந்திராவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கேகே நகரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.






