ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக M.ராஜராஜன் பொறுப்பேற்ற நிலையில் A.ராஜராஜன் என்ற காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது
தகராறு தொடர்பான வழக்கில் பெண்ணின் பெயரை சேர்க்காமல் இருக்க இரண்டாம் தவணையாக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிடிபட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே இடையத்தூர் மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பூமிநாதன்மனைவி ஹேமலதா.இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஒரு வாரத்திற்கு முன் தகராறு ஏற்பட்டது.
இதில் தொடர்புடைய ஒரு பெண்ணின் பெயரை வழக்கில் சேர்க்காமல் இருக்க பார்த்திபனூர் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஏற்கனவே ரூ.5 ஆயிரம் வாங்கிக்கொண்ட ராஜராஜன், மீதி தொகை ரூ.5 ஆயிரத்தை கேட்டு நச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மன உளச்சல் அடைந்த அப்பெண் 9489919722 என்ற எண்ணில் புகார் கூறினார்: அந்த அழைப்பை ஏற்ற சிறப்பு பயிற்சி சென்ற ராமநாதபுரம் எஸ்பி வருண்குமார் அறிவுறுத்தல்படி அப்பெண்ணின் உறவினர் தங்கவேல் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசில் இன்று புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனை படி ரசாயன பவுடர் தடவிய ரூ.500 நோட்டுகளை கொடுத்துள்ளனர்.

அதனை பெற்றுக் கொண்ட தங்கவேல், இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி., உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், சந்திரன் ஆகியோர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.






