--- --:--:-- --

விசைத்தறியில், கைத்தறி பட்டை நெய்த நான்கு பேர் கைது

5

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை ஜலகண்டாபுரம் ,வனவாசி ,உமகவுண்டம்பட்டி, நங்கவள்ளி, தாரமங்கலம், சின்னப்பம்பட்டி,செம்மாண்டப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவு கைத்தறியில் சுத்த பட்டு சேலைகள் நெய்யப்படுகிறது.கைத்தறியில் மட்டுமே நெய்ய வேண்டிய சேலைகளை சிலர் விசைத்தறியில் நெய்து வருகின்றனர்.

 

இதனால் கைத்தறி நெசவாளர்களும் அதன் உரிமையாளரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.தொடர்ந்து இதுபோல் எழுந்த புகாரையடுத்து,உமகவுண்டம்பட்டியில் செந்தில்குமார், கோபால் ஆகியோரையும், தாரமங்கலம் பகுதியில் வெங்கட்ராமன், வைரவேல் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

தொடர்ந்து இதுபோன்று சுத்த பட்டுகளை பயன்படுத்தி விசைத்தறியில் நெய்து பொதுமக்களை ஏமாற்றி பட்டு சேலைகளை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon