--- --:--:-- --

விபத்தில் பலியான திருப்பூர் செய்தியாளர் ராஜசேகர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!!

02b0dd7a-530b-48aa-b905-a1f26dabf5ad

கோவை அருகே கார் விபத்தில் பலியான  ஆங்கில நாளிதழின் திருப்பூர் செய்தியாளர் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் செய்தியாளர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமணத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது ராஜசேகர் ஓட்டிச் சென்ற கார் மீது அரசுப் பேருந்து மோதியது.இதில் ராஜசேகரின் தாயார் ஜமுனாராணி சம்பவ இடத்திலேயே பலியானார். செய்தியாளர் ராஜசேகர் படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருமணமான 7 மாதத்தில் மனைவி 6 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், விபத்தில் ராஜசேகர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது.

இந்நிலையில் செய்தியாளர் ராஜசேகர் மற்றும் அவருடைய தாயார் ஜமுனாராணி ஆகியோரின் உடல்கள், அவினாசி அரசு மருத்துவமனையில் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது திருப்பூர் மாவட்ட சக பத்திரிகையாளர்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

 

பின்னர் ராஜசேகர், அவருடைய தாயார் ஜமுனாராணி ஆகியோரின் உடல்கள் திருமுருகன்பூண்டியில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்திய பின் திருப்பூர் ஆத்துப்பாளையம் மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது திருப்பூர் ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினாா். பின்னர் இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டது. திருப்பூர் செய்தியாளர் ராஜசேகர் மறைவுக்கு, தமிழகத்தின் பல்வேறு பத்திரிகையாளர் சங்கத்தினரும், முக்கிய பிரமுகர்களும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon