பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதை எதிர்த்து மேல்முறையீடு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
எனினும் நால்வர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.






