சிஏஏ போராட்டம் : ஜேஎன்யூ மாணவர் கைது
தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ஷர்ஜில் இமாமை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகாரை சேர்ந்த ஷர்ஜில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் பிஎச்டி படித்து வந்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களிலும் ஷர்ஜில் பங்கேற்ற நிலையில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஷர்ஜில் இமாமை டெல்லி காவல்துறையினர் பாட்னாவில் கைது செய்தனர்.






