--- --:--:-- --

அடம்பிடித்து ஷவரில் குளித்து மகிழும் யானைகள்

8

கோவை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் குளித்து யானைகள் குதூகலித்து வருகின்றன. கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கிய முகாம் இம்மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 யானைகளுக்கு தினந்தோறும் சத்தான உணவு, இருவேளை நடைபயிற்சி, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

 

இதற்கிடையே யானைகள் குளித்து மகிழ பிரத்யேக ஷவரும் அமைக்கப்பட்டுள்ளது. புத்துணர்வு முகாம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று வழக்கம்போல் பாகன்களால் யானை குளிப்பாட்டபட்டு அழைத்துச் செல்லப்பட்டன. அப்போது சில யானைகள் வெளியேற மறுத்ததோடு பாகன்களிடம் அடம் பிடித்து தண்ணீரில் நனைந்து குதூகலித்தன.

Leave a Reply

Right Menu Icon