திருப்பூர் ஏ.கே.ஆர். அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் 71 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூரில் உள்ள ஏ.கே.ஆர். அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் 71 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மணிமலர் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மெட்டல் டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் மாவட்ட ரோட்டரி சங்க நிர்வாகியும், மென்திறன் பயிற்சியாளருமான நா.மாதவன் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் குடியரசு தின விழா பற்றிய குழந்தைகளின் பேச்சுரை, குழுப்பாடல், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பள்ளி நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம் நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அதேபோல், திருப்பூர், பிரிட்ஜவே காலனி, சூர்யா நகரில் உள்ள ஏ.கே.ஆர். அகாடமி (சி.பி.எஸ்.இ) பள்ளியில் நடந்த 71 வது குடியரசு தின விழாவுக்கு பள்ளியின் நிறுவனர் குப்புசாமி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கலைமணி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வடக்கு போலீஸ் நிலைய துணை ஆய்வாளர் தங்கவேல் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். கல்வி ஆலோசகர் ஷாகுல் ஹமீது, வாழ்வியல் ஆலோசகர் பிரபாகரன் ஆகியோர் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை குறித்து உரையாற்றினார்கள். முடிவில் ஆசிரியை பிரியங்கா நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினி செய்து இருந்தார்.






