--- --:--:-- --

வில்சன் கொலை வழக்கில் கைதான இருவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

4

சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடம் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் ரகசிய இடத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

 

கடந்த எட்டாம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் தனிப்படை அதிகாரிகள் தவ்ஃபீக் அப்துல் சமீம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்துள்ள அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

 

இருவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இவ்வழக்கை விசாரணைக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவர் அடிப்படையில் தவ்ஃபீக் அப்துல் சமீம் ஆகியோரை காவலில் எடுத்துள்ள என்‌ஐ‌ஏ அதிகாரிகள் நாகர்கோவிலில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon