லாரியில் சிக்கி பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சி..!
கோவையில் அருகில் பக்கவாட்டில் இரு சக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோவை மேட்டூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் தனது மனைவி பத்மாவுடன் செட்டிபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார்.
செட்டிபாளையம் பிரிவிலுள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது அவர்கள் சென்ற வாகனம் நிலைதடுமாறி பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் சிக்கியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய பத்மா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.
காயமடைந்த அழகர்சாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






