ஆதரவற்ற நிலையில் வாடும் முதியவர்
ராமசாமி என்னும் 80 வயது முதியவர் சேலம் மாவட்டம் ஆர் கே ,அக்ரஹாரத்தை சேர்ந்தவராவார், இவருக்கு பச்சமுத்து என்னும் ஒரு மகனும் மூன்று மகளும் உள்ளனர்.இவருக்கு பூர்வீக நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
அந்த விவசாய நிலத்தை தனது பெயரில் மாற்றித் தரும்படி அவரது மகன் அடித்து துன்புறுத்துவதாகவும், மிரட்டுவதாகவும் கூறுகிறார். அதுமட்டுமின்றி அவரது மூன்று மகள்களும் முற்றிலுமாக அவரை உதறி தள்ளிவிட்டுள்ளனர் .இந்த காரணத்தினால் சொத்து தொடர்பான ஆவணங்களை தன் கையில் எடுத்துக்கொண்டு மகன் வீட்டை விட்டு வெளியேறி, சாலையோரங்களில் பசி பட்டினியோடு வாடியுள்ளார்.
இந்த செய்தியை அறிந்த சிலர் அவரை மீட்டு தனியார் ஆதரவற்றோர் அமைப்பில் சேர்த்துள்ளனர்.இப்படிபட்ட சித்தரவதை நடப்பதை பலமுறை அவர் காவல்நிலையங்களில் புகார் அளித்தும் காவல்துறையுடன் உதவியோடு அவரது மகன் சமரசம் பேசி அனுப்பி விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவரது நிலைமையை அறிந்து மாவட்ட நிர்வாகம் அவருக்கு உதவுமாறும், அவரை அவரது மகனிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே அவரின் வேண்டுகோளாக உள்ளது.






