ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்,ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு வரும் 30 தேதி மறைமுகத் தேர்தல்
கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது,வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் 11ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஊராட்சிகுழு துணைத்தலைவர் போட்டிக்கு மறைமுக தேர்தல் நடந்தது,அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தங்களது பதவியை ஏற்றுக்கொண்டனர்.
அப்பொழுது விட்டுப்போன சில இடங்களுக்கு மட்டும் வரும் 30 தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.சேலம் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 3 ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கும் அதே ஒன்றியத்தில் துணைத் தலைவர் பதவிக்கும் மற்றும் 19 ஊராட்சிகுழு துணை தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.






