டிக்டாக் வீடியோ எடுத்தபடி பயணம் – ஒருவர் உயிரிழப்பு
ஒடிசா மாநிலம் கான்பூரில் இளைஞர்கள் டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கஞ்சுர் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கர் சாகு என்பவர் தனது மைத்துனர் உடன் ஆலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
இருவரும் டிக் டாக் வீடியோ எடுத்தபடியே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். கஞ்சுர் பகுதியில் அவர்களது வாகனத்தின் மீது டிரக் ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிவசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மைத்துனர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






