--- --:--:-- --

அரைகுறை உடையில் ஆசிரியை சடலம் – சக ஆசிரியரே கொலை செய்த கொடூரம்

10

கேரளா ஆசிரியை ரூபஸ்ரீ தலைமுடி அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் பணியாற்றிய சக ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். உடம்பெல்லாம் காயங்கள், உடைகள் கலைந்து தலைமுடி அறுக்கப்பட்ட நிலையில் ஆசிரியை ரூபஸ்ரீ கொடூரமாக கொன்ற வழக்கில் கொலையாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ரூபஸ்ரீ உடன் பணியாற்றும் சக ஆசிரியரே ஒரு ஆசிரியையை கொலை செய்தது ஏன்?

 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ரூபஸ்ரீ. அவரது கணவர் வங்கி ஊழியரான சந்திரசேகர். ரூபஸ்ரீ மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ரூபஸ்ரீ வழக்கமாக பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் தான் செல்வார். அப்படி கடந்த 16ம் தேதி சென்றவர் பள்ளியில் இருந்து நேரடியாக பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு சென்றார்.

 

அதன்பின்னர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கணவரும், உறவினர்களும் ரூபஸ்ரீ பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவே இல்லை. இந்த நிலையில் கடற்கரையில் தலைமுடி அறுக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் அரைகுறை ஆடையில் ரூபஸ்ரீ சடலமாக கிடந்தார். சடலம் அருகிலேயே ரூபஸ்ரீயின் இருசக்கர வாகனமும் கிடந்துள்ளது.

 

சடலத்தை பார்த்த மீனவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ரூபஸ்ரீயிடம் இருந்த 2 செல்போனில் ஒரு செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மற்றொரு செல்போனை ஆய்வு செய்யப்பட்ட நிலையில் அதன் டவறை ஆய்வு செய்தபோது அது ரூபஸ்ரீயின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காட்டியது.

இதைவைத்து கொலையாளிகளை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினர். இந்நிலையில் குடும்பத்தினர் மற்றும் சக ஆசிரியர்களிடம் விசாரித்தனர். விசாரணையில் கடந்த 16ம் தேதி ரூபஸ்ரீ தனது மகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட சென்றுள்ளார். அப்போது செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதை பேசிய உடன் முகம் மாறியதாக அவரது மகள் போலீசாரிடம் தெரிவித்தார்.

 

இதனால் செல்போன் சிக்னலை போலீசார் ஆராய்ந்தனர். அதில் கடைசியாக ரூபஸ்ரீ ஆசிரியர் வெங்கட்ராமனிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து வெங்கட்ராமனை போலீசார் விசாரித்தனர். அவரின் காரையும் ஆய்வு செய்தனர். அப்போது அவரது கார் டிக்கியில் ரூபஸ்ரீ முடி இருப்பதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து வெங்கட்ராமன் தான் கொலையாளி என முடிவு செய்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் லோன் எடுத்தது தொடர்பாக இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக இதற்காக அவரை கடந்த 16ஆம் தேதி அந்தப் பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்ததும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். தனது காரிலேயே ரூபஸ்ரீ வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

 

வெங்கட்ரமணா அங்கு ரூபஸ்ரீயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேற முயற்சித்துள்ளார். அப்போது தனது கார் ஓட்டுநர் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்து வீட்டிற்குள் தயாராக வைத்திருந்த கெமிக்கல் கரைசல் கலந்த நீரில் தலையை அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை காரில் வைத்து கடலில் வீச வெங்கட்ராமனும் அவரது ஓட்டுநரும் முடிவு செய்துள்ளனர்.

 

இதனிடையே மங்களூரு சென்றிருந்த வெங்கட்ரமணா மனைவி வந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து உடலை வைத்துக் கொண்டே வெங்கட்ராமன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டுள்ளார். பின்னர் ரூபஸ்ரீ உடலை அவரின் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய இடத்திற்கு அருகிலேயே கொண்டுபோய் வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

 

இதையடுத்து ஆசிரியை வெங்கட் மற்றும் அவரது கார் ஓட்டுநர் நிரஞ்சன் குமாரை கைது செய்தனர் அவர்களிடம் ரூபஸ்ரீயின் தலைமுடியை அறுத்தது ஏன்? உடைகள் களையப்பட்டது ஏன் என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தொடர் விசாரணையின் முடிவில் தான் கொலைக்கு வெறும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மட்டும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தெரியவரும்.

Leave a Reply

Right Menu Icon