ஏப்ரல் மாதம் முதல் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு செல்ல புதிய விமான சேவை தொடங்கும்
வரும் ஏப்ரல் மாதம் முதல் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு செல்ல புதிய விமான சேவை தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் விமான நிலைய முதல் ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் விமான நிலைய இயக்குனர் வெங்கடாஜலபதி,இந்த குழுவின் தலைவரும் மக்களவை உறுப்பினராகி எஸ் ஆர் பார்த்திபன்,சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த அறிவிப்பை பற்றிக் செய்தியாளர்களிடம் கூறிய மக்களவை உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன்,மேலும் விமான நிலைய விரிவாக்கம் குறித்து விவசாயிகளிடம் ஆலோசனை நடத்திய பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் சேலத்தில் இருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னை வழியாக சீரடிக்கும்,சேலத்தில் இருந்து மங்களூர் வழியாக கோவா விற்கும் புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக அவர் கூறினார்.






