--- --:--:-- --

வெள்ளலூரில் ரூ.168 கோடி அளவில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை.அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு துவக்கி வைப்பு !!!

1

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் அதிகளவில் இருப்பதால் அன்றாடம் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.அதற்காக சாய்பாபா காலனி,காந்திபுரம்,சிங்காநல்லூர்,உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து இயங்கும் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

 

இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.மேலும்,நகருக்குள் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் 61.62 ஏக்கர் பரப்பளவில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

 

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். மேலும்,இப்பேருந்து நிலையத்தினால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பெரும் அளவில் குறையும் எனவும்,பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம்,வி.சி.ஆறுக்குட்டி,மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி,நிர்வாக பொறியாளர் ஞானவேல்,வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம்,பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon