--- --:--:-- --

ட்விட்டரில் அச்சுறுத்தப்படும் பெண் தலைவர்கள்

2

நடிகர் சிம்புவின் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள திவ்யா ஸ்பந்தனா சமீபத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டதை தொடர்ந்து ட்விட்டரில் இருந்து வெளியேறினார். காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக தலைவராக இருந்த ஒருவருக்கே கருத்துரிமை இல்லை என்ற குரல்கள் அப்போது நாடு முழுவதும் எழுந்தன.

 

தற்போது ஆம்னஸ்டி நிறுவனம் இந்தியாவின் 98 பெண் அரசியல்வாதிகளின் ட்வீட்டுகளை மாதிரியாக எடுத்துக் கொண்டு அவர்கள் டுவிட்டரில் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் பின் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் பாலினம், சாதி, மதம் போன்ற காரணங்களுக்காகவும் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

2019 மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்டுகள் மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த 98 பெண் அரசியல்வாதிகளின் மொத்த பதிவுகளில் 13.8 சதவீதம் பதிவுகளை மோசமான வசைகளை எதிர்வினையாக பெற்றுள்ளன.

 

மேலும் இவர்கள் ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மோசமான ட்வீட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பெண் அரசியல்வாதிகள் மற்ற பெண்களை விட 94.1 சதவீதம் அளவுக்கு இன மற்றும் மத ரீதியிலான அவதூறுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

 

பெண் அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் சிறுபான்மையினர், பட்டியல் இன மக்களும் அதிகளவில் டுவிட்டரில் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்பது இந்த ஆய்வு முடிவு.

Leave a Reply

Right Menu Icon