நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடைபெற்ற தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக வாக்காளர் பட்டியலை தயாரித்து மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும், அதுவரை தற்போதைய சிறப்பு அதிகாரி கீதா பதவி தொடரவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், விஷால் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. கடந்தாண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
தேர்தல் முடிவுகளை வெளியிட கோரி விஷால் தரப்பிலும் விதிப்படி நடக்காத தேர்தலை ரத்து செய்யக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்தது.
புதிதாக வாக்காளர் பட்டியலை தயாரித்து மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் தேர்தலை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.






