5வது முறையாக திருமணம் செய்த 52 வயது பிரபல நடிகை..!
பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் 74 வயதான தயாரிப்பாளர் ஜான் பீட்டர்சை ஐந்தாவது திருமணம் செய்துள்ளார். பேவோச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் இசைக்கலைஞர் டோமிலி என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.
அவரிடமிருந்து 1998-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006 ஆம் ஆண்டு கிட்ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்து 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். ரெக் சாலமன் என்கின்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
2014 ஆம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டு அதே ஆண்டில் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் பமிலா ஆண்டர்சன் பேட்மேன் உட்பட பல படங்களை தயாரித்த 74 வயதான ஜான்பீட்டர்சை திருமணம் செய்துகொண்டார். கலிபோர்னியாவில் உள்ள மேலிகோவில் இவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது.






