‘வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை சிறையிலிடுங்கள்’- கங்கனா ரனாவத் ஆவேசம்
நிர்பயா கொலை குற்றவாளிகளுடன் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை நான்கு நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆவேசமாக கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான அநீதிக்கு சட்டரீதியாக போராடும் பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தனது டுவிட்டரில் நிர்பயாவின் தாயார் ஆஷாதேவியின் வேதனையை தான் முழுமையாக அறிவதாகவும் எனினும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை மன்னித்த சோனியா காந்தியை முன்மாதிரியாகக் பின்பற்றும்படி கேட்டுக்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார்.

நிர்பயாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினாலும் மரண தண்டனையை தான் எதிர்ப்பதாக இந்திரா ஜெய்சிங் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை நிர்பயா குற்றவாளிகளுடன் நான்கு நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற பெண்கள் தான் அசுரர்களையும் கொலையாளிகளையும் பெற்றிருக்கிறார்கள் என்றும் கடுமையாக சாடியுள்ளார்.






