குரூப் 4 தேர்வுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாக வாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து அந்த தேர்வுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் கீழக்கரை மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குரூப்-4 தேர்வுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.






