எனது தந்தை அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி – ஸ்ருதிஹாசன்
தனது தந்தை கமலஹாசன் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி தருவதாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நிறுவப்பட்டிருக்கும் புதிய நகை கடையை ஸ்ருதிஹாசன் திறந்துவைத்தார்.

அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கடையின் முன் திரண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சுருதிஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தன்னுடைய ஆதரவு உண்டு என்றும், சமூக சிந்தனை கொண்ட தனது தந்தை அரசியலில் ஈடுபடுவது மகிழ்ச்சி என்றும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




