--- --:--:-- --

கழிவறைக்கு செல்லும் நீரை தேநீர் குவளையில் கலந்த டீக்கடைக்காரர்..!

2

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் நீரை தேனீரில் கலந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட கடையை மூட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏழாவது நடைமேடையில் சிற்றுண்டி கடை உள்ளது.

 

இந்த கடையில் பணியாற்றும் ஊழியர் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை தேநீர் குவளையில் ஊற்றும் காட்சிகள் சமீபத்தில் வெளியானது. இது குறித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கடையை மூட உத்தரவிட்டுள்ள ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

தரமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும் எனவும் பிற கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon