துக்ளக் மூலம் சோ மக்களுக்கு பாடம் நடத்தினார்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
இன்றைய சமூகமும், அரசியலும் கெட்டு போய் கிடப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துக்ளக் நிறுவன ஊழியர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
துக்ளக் இதழின் 50 ஆண்டு சிறப்பு மலரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட அதனை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் இன்றைய சமுதாயமும் அரசியலும் மிகவும் கெட்டுப்போய் உள்ளது என்றும், தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிக்கையாளர் மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




