--- --:--:-- --

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட முயன்ற பெண்கள் கைது

8

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். பேஸ்புக் மூலமாக ஒன்று திரண்ட பெண்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வந்ததையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

 

இதனையடுத்து பெண்கள் சிலர் போராட்டம் நடத்த முயன்ற போது காவலர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 5 பெண்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

 

குடியுரிமை சட்டத்திருத்தம் திரும்ப பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என கைதுசெய்யப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon