போகிக்கு டயர், பிளாஸ்டிக் எரிக்கக்கூடாது : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
சென்னையில் போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
போகிப் பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள், பழைய துணிகளை பொதுமக்கள் எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் சென்னையில் 30 சிறப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இக்குழுவினர் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எரிக்கப்படுவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





