--- --:--:-- --

கணக்கெடுப்பு பணிக்காக யாரும் வரக்கூடாது : இஸ்லாமியர் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள்

6

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் கணக்கெடுப்பு பணிக்காக யாரும் உள்ளே வர அனுமதி இல்லை என இஸ்லாமிய மக்களின் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களால் பரபரப்பு நிலவியது.

 

கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து தனியார் நிறுவனம் சார்பில் இப்பகுதிக்கு வந்த 2 இளைஞர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்வதாக கூறினர்.

 

குடும்பத் தலைவர், உறுப்பினர், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை கேட்டதால் சந்தேகமடைந்த முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று திரண்டு அவர்களை சந்தேகத்தின்பேரில் அரவக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் சுகாதார திட்டங்கள், சுகாதாரப் பணிகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

அவர்களை விசாரித்த போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞர்களை அனுப்பி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அரவக்குறிச்சி பகுதியில் சுமார் ஆயிரம் வீடுகளில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி என்ற பெயரில் யாரும் உள்ளே வரக்கூடாது என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon