ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்
டெல்லி ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையிலும், மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்த மாணவர் சங்க தலைவி ஆய்சியையும் சந்தித்து போராட்டம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் கல்வி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.






