--- --:--:-- --

அங்கீகாரத்திற்காக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் திருநங்கை

5

தனக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்துவதற்காகவே மதுரையை சேர்ந்த திருநங்கை ஒருவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை கிராமத்தில் வசித்து வருபவர் வினோத் என்கிற சிந்தாமணி. திருநங்கையான இவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நிலையில் அதிலிருந்து மீள்வதற்காக 2015ஆம் ஆண்டு ராமு என்ற ஜல்லிக்கட்டு காளையை வாங்கியுள்ளார்.

 

தினமும் அந்த காளைக்கு நீச்சல், மண் குத்துதல் என அவரே பயிற்சி அளித்து வருகிறார். இதன் பலனாக 2015 முதல் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று ராமு வெற்றிகளை குவித்து வருகிறது. மஞ்சுவிரட்டு, எருதுகட்டு விழா என எல்லாப் போட்டிகளிலும் முத்திரை பதிக்கும். சைக்கிள், வீட்டு உபயோகப் பொருள், தங்க காசு,வெள்ளி காசு என பரிசுகளை அள்ளிக் கொண்டு வருகிறது, தற்போது மூன்று காளைகளுக்கு உரிமையாளாராக இருக்கிறார் சிந்தாமணி.

 

சிந்தாமணிக்கு தங்க காசு கொடுத்து வண்டி வாடகை கொடுத்து போட்டி ஏற்பாட்டாளர்கள் மரியாதை செய்கின்றனர். ஒரு காலத்தில் கைதட்டி சிரித்தவர்கள் கிண்டல் செய்தவர்கள் தற்போது மரியாதையுடன் கையெடுத்து கும்பிடுவதற்கு ஜல்லிக்கட்டு காளையை காரணம் என நன்றியுடன் கூறுகிறார் சிந்தாமணி.

Leave a Reply

Right Menu Icon