தொடர் வீழ்ச்சியில் இருந்த தொழிற்சாலை உற்பத்தித் துறை நவம்பரில் 1.8% உயர்வு
கடந்த ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் தொடர்ந்து சரிவு கண்ட தொழிற்சாலை உற்பத்தி குறியீடு நவம்பர் மாதத்தில் முதல் முறையாக 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய தொழிற்சாலை உற்பத்தி குறியீடு 0.2% உயர்ந்த நிலையில், இப்போது வளர்ச்சி 1.8 சதவீதமாக உள்ளதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவிக்கிறது. குறிப்பாக கடந்த நவம்பரில் உற்பத்தி துறையில் வளர்ச்சி 2.7 சதவீதமாக இருந்த நிலையில் நுகர்வோர் பொருட்கள் துறை 2% வளர்ச்சி கண்டது.





